கேரளா – திருச்சூரில் அரசு பேருந்து அங்கமாலியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி செல்லும் வழியில்
பெரமங்கலம் என்ற இடத்தில் வந்தபோது பேருந்தில் இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடிரென பிரசவ வலி ஏற்பட்டது.
பஸ் டிரைவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மருத்துவ ஊழியர்கள் வந்து பிரசவ வார்டிற்கு மாற்றும் முன்பே, பஸ்ஸிலிருந்து பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது
தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.