தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் தெரு நாய்கள் கருத்தடை தொடர்பான கண்காணிப்பு அலுவலர் சுரேஷ் கிறிஸ்டோபர் , திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் துணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் உதவி இயக்குநர் சரவணகுமார் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் மாவட்ட சிறை பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் இடத்தினை ஆய்வு மேற்கொண்டனர் .
இது தொடர்பாக கால்நடை பராமரிப்பு துறையினர் கூறுகையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய இடத்தில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்ததாகவும் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய கால்நடை மருத்துவமனை மூலமாக கால்நடை மருத்துவர் ஒருவர் ஓர் ஆண்டு காலத்திற்கு இலவசமாக பணியாற்ற அனுப்பி வைப்பதாகவும் விலங்குகள் நல வாரிய கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்