திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கிழக்கு வாயில் பகுதியில் சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்தது. இதனைக் கண்ட வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற கிழக்கு வாயில் பகுதியில் தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி சுமார் 5 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை உயிருடன் பிடித்தனர்