திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதி சிக்கமானநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட போட்டிக்காம்பட்டியின் மஹா காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவிழாவில் திமுக ஒன்றிய கவுன்சிலர் SR. பழனிச்சாமி. அனைவரையும் அதிர்ச்சி அடையும் வகையில் நடந்து கொண்டார். அவர் மது போதையிலிருந்ததாக சொல்லப்படும் நிலையில் கரகாட்ட பெண்களுடன் திடீரென நடனமாட தொடங்கினார் .
அவர்களை தொட்டு ஆபாசமான செய்கைகளுடன் நடனமாடியது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதையடுத்து கரகாட்ட பெண்கள் முகம் சுளித்த போதும் தொடர்ந்து அவர்களை கட்டி அணைத்தபடி ஆபாச நடனம் ஆடினார் பழனிசாமி.
இதனால் அதிர்ச்சியடைந்த அவ்வூர் பெண்கள் கிளம்பத் தொடங்கினர். தொடர்ந்து இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.நவீன செல்போன் யுகத்தில் டிஜிட்டல் மீடியா வளர்ச்சியால் செல்போன் வைத்திருக்கும் அனைவருமே செய்தியாளர்கள் என்று நிலைமை ஆகிவிட்டது.
இதன் காரணமாக சில நேரங்களில் பெரிய அரசியல் பிரமுகர்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமான சம்பவங்கள் பல நடைபெற்று இருக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது.