திண்டுக்கல், பழனிசாலை அய்யன்குளம் அருகே திண்டுக்கல் to பழனி சாலையில் நடுரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகள் கூட்டமாக ஓடும் காட்சி
ஏற்கனவே பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் , விலங்குகள் நல ஆர்வலர்கள் உட்பட பலர் திண்டுக்கல் மாநகராாட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் அனைத்து புகார் மனுக்களும் அதிகாரிகளின் டேபிளில் அடுக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் .
மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் சாலையில் செல்லும் அனைவரும் பாதிக்கப்படுவதாகவும் , மாடுகள் விபத்தை ஏற்படுத்தி வருவதால் காவல் துறை , வருவாய்துறை , கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கம் உட்பட மற்ற துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், அப்பகுதி பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்