கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை மற்றும் சென்னை வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் களியல் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழு கடையாள்மூடு பகுதியில் எட்வின் தேவராஜ் (67)த.பெ. தங்கமணி என்பவரின் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த யானைத் தந்தங்களை கைப்பற்றினர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த பிரதீப் குமார்(53) என்பவரும் வனத்துறையினால் கைது செய்யப்பட்டார் .
மேலும் இவர்கள் இருவரிடம் நடத்தி விசாரணையில் இதற்கு மூல காரணமாக இருந்தது கல்லரவயல் பகுதியை சார்ந்த சுரேஷ் காணி (46)என்பவர் என்பது தெரிய வந்து பின்பு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யானை தந்தங்கள் விற்பனைக்காக எட்வின் தேவராஜ் அவர்களிடம் கொடுத்ததை ஒப்புக் கொண்ட நிலையில் சுரேஷ் காணி வீட்டில் இருந்து யானை பற்கள் நான்கு எண்ணம் கைப்பற்றப்பட்டு இவர்கள் மூவரையும் கைது செய்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இ