
குன்னூர் காந்திபுரம் பகுதியில் உதகை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நான்கு சாம்பிராணி மரங்களை சமூக விரோதிகள் அமிலம் ஊற்றி பட்டு போக செய்திருக்கிறார்கள். இது சாலையின் நடுவே அமைந்திருந்தாலும் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சாலை விரிவாக்க பணியும் போது அப்படியே விடப்பட்டது. தற்போது அதை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் செயல்படுகிறார்கள். அரசாங்கம் இதை கூடிய விரைவில் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.