
கூடலூரை அடுத்துள்ள செலுக்காடி கிராமத்துக்குள் புதன்கிழமை காலையில் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பை சேதப்படுத்தின.நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா செலுக்காடி கிராமத்துக்குள் புதன்கிழமை காலை 8 மணிக்கு இரண்டு காட்டு யானைகள் நுழைந்தன. அந்த காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதியிலுள்ள சாலைகளில் நீண்ட நேரம் நடமாடின.பின்னா் அந்த யானைகளைப் பாா்த்த ஒரு வீட்டிலிருந்த வளா்ப்பு நாய் குரைத்தவுடன் நாயை துரத்திக் கொண்டு வீட்டுக்கு யானைகள் ஓடி வந்தன. இதனைப் பாா்த்து, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அலறியடித்து ஓடினா். தொடா்ந்து நடமாடிய யானைகள் அங்கிருந்த தேவன் என்பவரது வீட்டை சேதப்படுத்தின. பின்னா் அங்கிருந்தவா்கள் சப்தம் போட்டதால் வந்த வழியே யானைகள் திரும்பின.இது குறித்து உடனே வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் அப்பகுதியை ஆய்வு செய்தனா்.