
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின்படி, ஒட்டன்சத்திரம் உட்கோட்டம் டி.எஸ்.பி முருகேசன் ஆலோசனையின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா தலைமையிலான காவலர்கள் வேளாங்கண்ணி,கார்த்திக் ராஜன்,மோரிஸ் ஜோசப்ராஜ், காங்குமணி ஆகியோர் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாளையங்கோட்டையை சேர்ந்த கோவிந்தன் மகன் விஜய் ஓட்டி வந்த. TN40K8739 என்ற எண் கொண்ட லாரியில் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை ஆதிலட்சுமிபுரம் பிரிவு அருகே வைத்து சுமார் 3 கிலோ கஞ்சாவை கைப்பற்றி செம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர் .