மன நிம்மதிக்காக செல்லக்கூடிய ஒரே இடம் கோவில்தான்..
தமிழகத்திலே மிகப்பெரிய சிவதலம் திருத்தலமும் சார்ந்திருக்கும் திருக்குற்றாலநாதர் திருக்கோவில் தற்போது அழிவின் விளிம்பில் பாதுகாப்பற்ற முறையில் இருந்து வருகிறது என்பதை இந்த ஒரே படம் சாட்சி.
திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் உள்ள விலை மதிக்க முடியாத நகைகள் பொக்கிஷங்கள் மாயமானாலும் இத்திருக்கோவில் மௌனமாக தான் இருக்கும்…. திருக்கோவில் வாசல் பகுதியில் மது போதையில் மது பிரியர் ஒருவர் கல் மண்டபத்தில் கவிழ்ந்து தூங்கும் காட்சி .
இங்கு பாரா பணிக்கென்று போடப்பட்ட நபர் என்ன செய்கிறார் என்பதே தெரியாது. நிலையான அதிகாரி இல்லாத ஒரே காரணத்தால் பல்வேறு குற்றச்சாட்டுக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறது, திருக்குற்றால நாத திருக்கோவில்.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை சம்மந்தபட்ட நிர்வாக அதிகாரி கண்டும் காணாமல் இருந்து வருகிறார் என உள்ளூர் பக்தர்கள் கூறுகின்றனர் . மேலும் இவர் சரியாக இருந்தால் மட்டுமே இத்திருக்கோவில் சரியாக இருக்கும் பணி நிறைவு பெறுவதற்கு குறுகிய காலம் உள்ளதால் எதையும் கண்டு காணாமல் செல்கிறார் என்றும் குற்றச்சாட்டை வைக்கின்றனர் .