
தற்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலையோரத்தில் உள்ள அரசு பச்சை மரங்களை தனியார் தொழில் நடத்தும் நிறுவனம் யாரிடமும் அனுமதி பெறாமல் இயற்கையான பசுமையான மரங்கள் மீது மின்சாரம் மூலமாக வண்ண கலர் மின்விளக்குகள் பொருத்துகின்றனர். காற்றில் அங்கும் இங்குமாக ஆடும் மின் விளக்குகளால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது கனரக உயர் வாகனங்கள் செல்லும் பொழுது உரசும் அபாயம் உள்ளது இதனால் விபத்து எப்போது வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பசுமையான மரங்கள் மீது மின்விளக்குகள் பொருத்துவதற்கு யார் அதிகாரம் அளித்தது யார் பொறுப்பு தென்காசி அருகே உள்ள பிரபலமான கடையில் பசுமையான மரத்தின் மீது போடப்பட்டுள்ள மின்விளக்குகள் மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்ததற்கு நிரந்தர தீர்வு காணப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. அதிகாரம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா சமூக ஆர்வலர்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் நெடுஞ்சாலை துறை நிர்வாகமும். மின்சாரத் துறையும் நடவடிக்கை எடுக்குமா?