இரவு நேரங்களில் இயற்கையை அழித்து எந்தவித அனுமதியுமின்றி கடத்துவதாக தகவல் சம்மந்தப்பட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குன்னூர் ஓதநட்டி பகுதிகளில் பல்வேறு வகையான பல ஆண்டுகளாக உள் விலை உயர்ந்த மரங்கள் உள்ளன . இவற்றை ஒரு கும்பல் இரவு பகல் பாராமல் வெட்டி கடத்தி வருகின்றனராம் .
இது குறித்து இயற்கை / வன ஆர்வலர்கள் இணைந்து உள்ள வாட்ஸ் ஆப் குரூப்களில் புகைப்படங்களுடன் பகிரப்பட்டு வருகிறது.
லாரிகளில் வெட்டி ஏற்றப்பட்டுள்ள மரங்களில் எந்த ஒரு அனுமதி பெற்றதற்கான குறியீடுகள் இல்லாமல் உள்ளது . இது போன்று குறியீடுகள் இல்லாத மரங்கள் அனைத்தும் கடத்தல் / முறைகேடாக வெட்டும் மரங்களாக மட்டுமே இருக்கும் என்றும் இதில் அப்பகுதியை கண்காணிக்கும் வனத்துறை , வருவாய்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தே தான் நடக்கிறது என்றும் குற்றம் சாட்டுகின்றனர் .
மாநில அளவிலான சம்மந்தபட்ட துறைகளின் உயரதிகாரிகள் தலையிட்டால் ஒழிய இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த முடியாது என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.