இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் கார்குடி வனச்சரக, கார்குடி பிரிவு வனக்காப்பாளர் தலைமையில் ஒம்பட்டா வேட்டை தடுப்பு காவலர்கள் தினசரி ரோந்து மேற்கொண்டு வந்தனர்
அப்பொழுது ஒம்பட்டா வேட்டை தடுப்பு முகாம் பகுதிக்கு அருகில் இருந்த சிறிய கால்வாயில் பிறந்து சில நாட்களே ஆன குட்டியானை ஒன்று விழுந்துகிடப்பதை அறித்தனர்
இந்த தகவலின் பேரில் உதகைமண்டலம் முதுமலை புலிகள் காப்பகம் கள இயக்குநர் திரு வெங்கடேஷ் IFS அவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களின் அறிவுரையின் பேரில் துணை இயக்குநர் வித்யா IFS அவர்களின் உத்திரவின்படி வனப் பணியாளர்கள் அதிகாரிகள் அடங்கிய குழு உடனடியாக அமைக்கப்பட்டு குட்டி யானையினை மீட்கும் பணி தொடங்கியது.
குட்டி.பத்திரமாக மீட்கபட்டு தாயுடன் சேர்க்கப்பட்டது தாயுடன் குட்டி யானை நலமாக உள்ளது.
மேலும் வனப் பணியாளர்கள் உடன் சேர்ந்து தாய் யானையையும், குட்டியானையையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.