திண்டுக்கல் மாநகராட்சி நகர் நல அலுவலராக பரிதாவணி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாசி சந்தித்து மாநகர் நல அலுவலருக்கு எதிராக புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்து இருப்பதாவது-: மாநகர் நல அலுவலர் எங்களை முறையாக பணி செய்ய விடுவதில்லை, அலுவலக பணிகளை தாமதப்படுத்துகிறார் இதனால் கோப்புகளில் அவரது கையெழுத்து பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது பணியாளர்களை அவமரியாதையாக திட்டுகிறார் இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி மேயர் சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிந்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் வந்தவுடன் இந்த விவகாரம் குறித்து பேசி சுமுகமான முடிவு எடுக்கலாம் என சுகாதார அலுவலர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்
இதுகுறித்து மாநகர் நல அலுவலர் பரிதாவாணி தெரிவித்ததாவது -: சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கூறும் புகாரில் உண்மை இல்லை பொது மக்கள்களுக்கான பணிகளை செய்து கொடுக்க சில அலுவலர்கள் பண வசூலில் ஈடுபடுகின்றனர் இதுகுறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் விசாரித்ததால் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர் பல பணியாளர்களிடம் முழு விவரத்தை தெரிவிக்காமல் கையொப்பம் பெற்று மேயரிடம் கொடுத்திருக்கின்றனர் இது தொடர்பாக ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்