கன்னியாகுமரி மாவட்டம் , தக்கலை போலீசார் திருவிதாங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஆட்டோவில் சோதனையிட்டபோது 2 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்ததையடுத்து கஞ்சா மற்றும் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஆட்டோவை ஒட்டி வந்த கிருபாகரன், அதிலிருந்த பிரதீஷ் குமார், ரஞ்சித், விஷ்ணு ஆகியோரை கைது செய்தனர்.
