நத்தம் செந்துறை அருகே அடைக்கனூரில் தனியார் பேருந்தும் பால் ஏற்றி வந்த மினி வேனும் மோதியதில் மினி வேன் டிரைவர் கருப்பையா பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் செந்துறை குரும்பபட்டியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
