
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் இன்று தேசிய ஊட்டச்சத்து மாத விழா குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சக்தி சுபாஷினி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாரத பிரதமரின் போஷன் அபியான் திட்டத்தின் மூலம் வளரிளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்பிணிகள, 0-2 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவதன் மூலம் ஆரோக்யமான சமூகத்தை உருவாக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியம் அவர்கள், வட்டாட்சியர் சிவபிரகாசம் அவர்கள், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் சிறப்பம்சமாக மருத்துவமனை வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.