உலக புலிகள் தினத்தை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர்அவர்களின் அறிவுறையின்படி, மசினகுடி துனை இயக்குனரின் உத்தரவுப்படி, முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி டவுன் பகுதியில் மாணவர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் பங்களிப்புடன் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
இப்பேரணி மசினகுடி நயாரா பங்க் பகுதியில் தொடங்கி மசினகுடி வன சோதனை சாவடியில் நிறைவு பெற்றது
பின்னர் மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மசினகுடி சுற்றுவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது
தேர்வுபெற்ற போட்டியாளர்க்கு சான்றிதழ், கேடயம் மற்றும் விழிப்புணர்வு புத்தக லேபில்கள் வழங்க பட்டது