திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் வட்டம் , பரளிபுதூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தனது நிலத்தை அளந்து பட்டா வழங்குமாறு இணையதளத்தில் பதிவு செய்தார்.
இதுகுறித்து வடமதுரை பத்திர பதிவு அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரியும் சுப்பிரமணி(58) என்பவர் ராஜசேகரை தொடர்பு கொண்டு நிலத்தை அளப்பதற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டு வடமதுரை பகுதியில் உள்ள உணவகத்தில் ரசாயனம் தடவிய ரூ.7000 லஞ்சம் பெறும்போது பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்