
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பாபநாசம் காரையாறு சொரிமுத்தையனார் கோவிலில் நேற்று ஆடி அமாவாசை விழா கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த இந்த விழாவை ஒட்டி சுகாதார ஆய்வாளர் தலைமையில் தன்னர்வலர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பரிகாரப் பொருட்களை சேகரித்தனர். இதில் இரண்டரை டன் கழிவுகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது.தொடர்ந்து இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் வனம் மற்றும் வனவிலங்குகள் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும், காரையார் பகுதி அதிகப்படியான வனவிலங்குகள் வாழும் பகுதி என்பதால் இத்தகைய செயலை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.