தொடர்ந்து இந்த பகுதிகளில் யானைகள் மரணம் வாரம் ஒரு முறை நடைபெற்று வருகிறது. இதே நிலை நீடித்தால் யானைகளே இல்லாத நிலை ஏற்படும்.
கூடலூர் பகுதிகளில் கடுமையான வனநில ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளது இதை உடனடியாக தமிழ்நாடு அரசு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வடவயல் பகுதிகள் எல்லாம் மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள் இது காலம்காலமாக யானைகள் அதிகளவில் வாழ்ந்த பகுதியாகும்.
வனநில ஆக்கிரமிப்புகளை அகற்றி, வனத்துறை திட்டமிட்ட யானை வழித்தடங்களை வரையறை செய்தால் மட்டுமே அங்கு மனித விலங்கு மோதல்கள் முற்றிலும் தடுக்கப்படும் என வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்