
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ.கிரி கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். உடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.