திண்டுக்கல்லில் வீட்டில் எஞ்சிய குப்பையை உரமாக்கி மாடி தோட்டம் அமைத்து அசத்திய 100 பேரை தேர்வு செய்து சுதந்திரதின விழாவில் பரிசு வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வமுள்ள சில குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உருவாகும் மக்கும் கழிவுகளை பயன்படுத்தி அதை உரமாக மாற்றி வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து இயற்கை முறையில் காய்கறிகளை தயாரித்துள்ளனர்.இதைதெரிந்து கொண்ட மாநகராட்சி நிர்வாகத்தினர் அடிக்கடி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நேரில் அழைத்து பாராட்டினர். இதைபார்த்து பலரும் இதேநிலையை கடை பிடித்து தங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்துள்ளனர். இவர்களில் 100 பேரை தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் விதமாக ஆக.15ல் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடக்கும் சுதந்திரதின விழாவில் நேரில் அழைத்து பரிசு வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அவர்களுக்கான லிஸ்ட் தயாரிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.