கன்னியாகுமரி நாகர்கோவில் தலைமை ரயில் நிலையத்தில் மெக்கானிக் பிரிவு அருகே ரயில் பெட்டிகளை இணைக்கும் போது எதிர்பாராத விதமாக தீயணைப்பு சிலிண்டர் திடீரென வெடித்தது.
இதில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிறிஸ்டோபரின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.உடனடியாக அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.