திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஆகஸ்ட்.23 மாலை நேரத்தில் 4 வது பிளாட்பாரத்தில் 10க்கு மேலான மாடுகள் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரிந்தன . இதை பார்த்த ரயில் பயணிகள் அச்சத்துடன் விலகிச்சென்றனர்.
இதனை கண்ட திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படையினர் மாடுகளை பின் தொடர்ந்து ஒத்தக்கண்பாலம் பகுதியில் உள்ள மாடுகளின் உரிமையாளரை கண்டு பிடித்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் தினமும் காலையில் மாடுகளை திறந்து விட்டால் சரக்கு இரயிலில் வரும் தானியங்களை சாப்பிட்டுவிட்டு இரயில் நிலைய நடைமேடைகளில் உலா வருவது பின்னர இரவு மீண்டும் வீட்டிற்கு திரும்புவதற்கு பழக்கப்படுத்தி வைத்திருந்துள்ளனர் என தெரியவந்துள்ளது . எனவே சம்பந்த பட்ட மாடுகளின் உரிமையாளரை எச்சரித்ததுடன் அவர்மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.