
சின்னசேலம், ஆக. 30: கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு அரவை பருவம் நாளை காலை துவங்க உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆலை நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். கச்சிராயபாளையத்தில் உள்ள கள்ளக்குறிச்சி2
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று காலை 9 மணியளவில் 2023/2024ம் ஆண்டு சிறப்பு கரும்பு அரவை பருவமும், 2024/2025ம் ஆண்டுக்கான முதன்மை கரும்பு அரவை பருவமும் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமை தாங்க உள்ளார். கள்ளக்குறிச்சி2 கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயலாட்சியர் யோக விஷ்ணு முன்னிலை வகிக்க உள்ளார். நிகழ்ச்சியில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் எம்எல்ஏ. ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு கரும்பு அரவையை துவக்கி வைக்க உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி எம்பி மலையரசன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப் பினர் செந்தில்குமார், வடக்கநந்தல் பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாக