கள்ளக்குறிச்சி வட்டம், சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையம்பட்டு கிராமத்தில் கள்ளக்குறிச்சி கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணிவி யர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் கல்லூரியினை திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது இக்கல்லூரியில் பயிலும் மாணவியர்களின் எண்ணிக்கை,
குடிநீர், சாலை போக்குவரத்து, பாதுகாப்பு, பேருந்து வசதிகள் குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்தும், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும் மாணவர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி நன்றாக படித்து உயர்கல்வி, வேலை வாய்ப்புகளை பெற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி தாசில்தார் கமலக்கண்ணன், பேராசிரியர்கள் உடனிருந்தனர்.