கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புள்ளியியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் விழிப்புணர்வு கணக்கெடுப்பு பணிகளை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான அறிவு, அணுகுமுறை மற்றும் நடைமுறைகளை பற்றிய அடிப்படை கணக்கெடுப்பு, வாக்காளர்களுக்கான முறையான விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு மதிப்பீடு செய்வதற்கான கணக்கெடுப்பு குறிதது புள்ளியியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உளுந்துார்பேட்டை ஆகிய சட்டசபை தொகுதிகளில் தலா 5 ஓட்டுச்சாவடிகளில், ஒரு ஓட்டுச்சாவடிக்கு 10 குடும்பங்கள் வீதம் மொத்தம் 150 குடும்பங்களில் புள்ளியியல் ஆய்வாளர்களால் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் வார்டு எண் 19-ல் நடைபெறும் கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில் சென்னை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குனர் கணேஷ் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வாக்காளர்களிடம் சம்மந்தப்பட்ட சட்டசபை, லோக்சபா தொகுதியின் விவரம், தேசிய வாக்காளர் தினம் நாள், தேர்தலி