கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் கூலித் தொழிலாளி காட்டு பன்றியை வேட்டையாட இடுப்பில் கட்டிக்கொண்டு சென்ற வெடிபொருள் வெடித்து பலியான சம்பவத்தில் கூட்டாளியான இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த அஜித் வயது 26,பெருவிளை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் வயது 35 ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் வெடிப்பொருட்கள் சப்ளை செய்த நபருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர் .
குமரி மாவட்டத்தில் வெடி மருந்து நடமாட்டம் இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது குவாரிகளுக்கு வழங்கப்படும் வெடிமருந்து கூலித் தொழிலாளி மற்றும் இளைஞர்கள் கைகளில் கிடைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது