திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில், மதியம் ஒரு மணி அளவில், இரண்டு பெண்கள் மது போதையில், குடுமி பிடித்து சண்டை போட்டுக் கொண்டனர்.
பேருந்து நிலையத்தில் தினமும் இதுபோன்று மது பிரியர்கள் இருக்கையில் ஆக்கிரமிப்புகள் செய்தும், சண்டையிடுவதும், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளிடம் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வதும், மேற்கொண்டு வருகின்றனர் என்றும் சம்மந்தபட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.