செங்கோட்டை
கடந்த புதன்கிழமை (09/10/2024 )அன்று செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையுடன் இணைந்துள்ள பாரில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் கப்புகள் உட்பட பல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டது .
இதனை தொடர்ந்து பார் உரிமையாளருக்கு செங்கோட்டை நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர் . ஆனால் பார் உரிமையாளர் அபராத தொகையை கட்ட முடியாது என்றும் தெரிந்ததை பாருங்கள் என்று நகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அரசு மதுபான கடை பாருக்கான கட்டணம் நான் கட்டுகின்றேன் என்றும் நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்ததால் நாங்கள் டிடி எடுக்க மாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுட்டதோடு ஆய்வுக்கு வந்திருந்த அலுவலர்களிடம் உங்களை என்ன செய்கிறேன் பார் என்று மிரட்டல் விடுத்த வீடியோ சமூக ஆர்வலர்கள் மூலம் வெளிவந்து தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .
தொடர்ந்து இந்த அரசு மதுபான கடையுடன் இணைந்துள்ள பாரில் தமிழக அரசு விதித்துள்ள பார் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்டுத்தி வருவதாகவும் உணவு பொருட்களை பாரிலேயே தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் நடவடிக்கை எடுக்க முற்படும் அதிகாரிகளையும் தங்களுக்கு உள்ள அரசியல் மற்றும் பண பலத்தால் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது .