கோக்கு மாக்கு
Trending

இடையகோட்டையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை ரூ.1,10,000 அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வடுகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் மகன் பிரவீன்(24) என்பவரை இடையகோட்டை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இடையகோட்டை காவல்துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று
சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் பிரவீனுக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.1,10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button