திருச்சி மாவட்டம்:
திருச்சி மாவட்டம் , தொட்டியம் தாலுகா பகுதியில் இயங்கி வரும் வெற்றி விநாயக காலேஜ் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து விசாரித்த போது இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் விடுதி கட்டணமாக ரூ.20000 கட்ட வேண்டும் என்றும் இல்லையெனில் நிலுவை தொகை 6000 ரூபாயை கட்டிவிட்டு வெளியேற வேண்டும் என நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால் முதலாமாண்டு சேர்க்கையின் போது கல்வி கட்டணம் மட்டும் கட்டினால் போதும் தங்குமிடம் உணவு இலவசமாக வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் கூறியதாகவும் தற்போது மொத்தமாக 20,000 ரூபாய் உடனடியாக கட்ட வேண்டும் என்றும் இல்லையெனில் இதுவரை தங்கியதற்காக 6000 ரூபாய் கட்டிவிட்டு விடுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என மிரட்டுவதாக மாணவர்கள் தரப்பில் கூறுகின்றனர். திடீரென 20,000 ரூபாய் கட்ட நிர்பந்தித்து மிரட்டப்படுவதை தொடர்ந்து மாணவர் மாணவியர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களின் போராட்டத்தை கைவிட செய்தனர்.
தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பான விபரங்களை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு பெற்றுக் கொள்கின்றோம் என்று மாணவ மாணவியர்களிடம் நேற்று இரவு எழுதி வாங்கியதாகவும் தகவல்.