
ஆதித்தமிழர் கட்சி திண்டுக்கல் மாவட்ட தலைவர் வினோத் தலைமையில் மாவட்ட செயலாளர் பழனிராஜா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சிறுமலை ஊராட்சி பகுதிக்குட்பட்ட சிறுமலைபுதூர், பழையூர், தென்மலை, அகஸ்தியர்புரம் உட்பட சிறுமலை மலை பகுதியின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. எனவே சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீதும் துணை போகும் வனத்துறையினர் , காவல்துறையினர் மற்றும் இதர துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.