விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த வெள்ளம்! 20 பெண்கள் உள்பட 150 பேரை கயிறு கட்டி தீயணைப்பு நிலையத்தினர் மீட்டனர்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட மேற்கு பகுதியில் செண்பகத் தோப்பு உள்ளது. இப்பகுதியில் ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த ராக்காச்சி அம்மன் கோயில் வழியாக காட்டாறு ஓடுகிறது. இந்த காட்டாற்றில் நேற்று மாலை பெய்த மழை காரணமாக பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கு மேற்கே மீன்கொத்தி பாறை என்ற ஒரு பகுதி உள்ளது. அந்தப் அந்த பகுதியிலும் ஒரு 50 பேருக்கு மேல் குளித்துக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளித்துக் கொண்டிருந்தவர்கள் கரையேறினார்கள். மீன்கொத்தி பாறையில் தங்குவதற்கு ஒதுங்குவதற்கு இடம் இல்லாத நிலையில் பலத்த மழையில் நனைந்து கொண்டே காத்திருந்தனர். ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் ஓரளவு தங்குவதற்கு வசதி உள்ள நிலையில் அங்கு 100 பேர் காத்திருந்தனர். தகவல் கிடைத்தவுடன் ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொட்டும் மழையில் அவர்களை பத்திரமாக மீட்டனர்.