
பணியில் இருக்கும் போது உடல் நலம் பாதிக்கப்பட்டோ, விபத்திலோ உயிரிழந்துள்ள காவல்துறையினருக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக தமிழிக அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்த காவல்துறையைச் சேர்ந்த 9 பேர் விபத்திலும், 16 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டும் பணியில் இருந்த போது உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-ராய்