திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் பகுதியில் 100 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் உலா வருகிறது குறிப்பாக சிறு வியாபாரிகள் காய்கறி விற்பனையாளர்கள், கூலி தொழில் செய்யும் நபர்கள் செங்கல்சூளைகளுக்கு வேலைக்கு செல்லும் ஆட்கள் போன்ற நபர்களுக்கு தெரியாமல் அவர்கள் கையில் கள்ளநோட்டுகள் வந்து விடுகிறது
இதனால் கூலி தொழிலாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறையினர் சார்பில் உரிய நடவடிக்கை எடுத்து கள்ளநோட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்