திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாபு(40). ராணுவ வீரர். இவரது மனைவி மோனிஷா(35). நேற்று (நவம்பர் 22) தம்பதியின் மகளும், மகனும் பள்ளிக்கு சென்றனர். மோனிஷா வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் பணிக்குச் சென்றார். வேலை முடித்து மோனிஷா திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிமணிகள் மற்றும் பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 15 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ. 20 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து மோனிஷா கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் விரைந்து வந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.