
அந்தமான் கடலில் 5 டன் போதைப்பொருளுடன் வந்த படகு சிக்கியுள்ளது. கடலோர காவல் படை சந்தேகத்தின் அடிப்படையில் படகை மறித்து விசாரித்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை கடத்தி வந்தவர்களிடம் கடலோர காவல்படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு பல ஆயிரம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.