திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக நத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து புறநகர் டிஎஸ்பி சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சிறுகுடி, மேலமேட்டுபட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமியை(33) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 9 1/2 தங்க நகையை மீட்டு ஆண்டிச்சாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்