தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக நடந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அய்யாமோகன் தலைமை தாங்கினார்.
மாவட்டத் துணைத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, மனுவேல் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கேசவராமானுஜம் வரவேற்றார்.மாவட்டத் துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, ஓய்வுபெற்ற கிராமுதவியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராசு, வட்டத் தலைவர்கள் தங்கவேல், அன்பழகன், உதயசூரியன், குமரவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கவுரை ஆற்றினர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது அடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.