
மணல் கடத்திய லாரி மற்றும் ஜே.சி. பி., இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று (செப் 9) காலை திடீர்குப்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஏரி வாய்க்கால் அருகே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 2 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் கோமுகி ஆற்றில் இருந்து கடத்தி வந்ததும் தெரிந்தது. அதனைத் தொடர்ந்து டிப்பர் லாரி மற்றும் ஜே. சி. பி., இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், கோமுகி டேம் ரவி, 35; எடுத்தவாய்நத்தம் மகேஷ், 45; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
