
உளுந்துார்பேட்டை தாலுகா திருநாவலுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணி ஆணை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த பணி ஆணையை வழங்க வலியுறுத்தி 20 ஊராட்சி மன்றத் தலைவர்கள் நேற்று(செப்.19) மதியம் 1.40 மணியளவில் திருநாவலூர் பி. டி. ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பி. டி. ஓ., மற்றும் அதிகாரிகள் ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து நேற்று மதியம் 3 மணியளவில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.