தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொன்ராஜ் , தனிப்பிரிவு காவலர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முத்துநகர் ஆயில் மில் அருகே ஒரு குடோனில் 2 டன் ரேஷன் அரிசி 60 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அந்த 60 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தியதில் அந்த குடோனில் கோவில்பட்டி ஊரணித் தெருவை சேர்ந்த சின்ன மாரி என்பவர் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.