
40 டன் பாறைக்குக் கீழே சிக்கியுள்ள 5 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரை மீட்கும் பணி 15 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்கிறது. பாறையை வெடி வைத்துத் தகர்ப்பது குறித்து NDRF குழு ஆலோசனை நடத்தி வருகிறது. ஃபெஞ்சல் புயலால் தி.மலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் கோயில் பின்புறம் மலையடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் 11வது தெருவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ராஜ்குமார் அவரது மனைவி உள்ளிட்ட 7 பேர் சிக்கிக் கொண்டனர்.