
கல்வராயன்மலையில் மழையின் காரணமாக மலைவாழ் மக்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளும் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கல்வராயன் மலையில் உள்ள கரியாலூர், எழுத்தூர், ஈச்சங்காடு, கிழாத்துக்குழி, ஏட்றப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் கூறியுள்ளார்.