
நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் பெரிய கந்தூரி திருவிழா டிச.,3ஆம் தேதி தொடங்கியது. வரும் 12ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. இதற்காக நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நாகூருக்கு சிறப்பு பஸ்சில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. கட்டணம் ரூ.385. பஸ்சை பொறுப்பாளர்கள் வாடகைக்கு எடுத்து 50 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.