
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 ஆயிரத்து 816 பேர், பெயர் நீக்கம் செய்ய 3286 பேரும், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய 6071 பேர் என மொத்தம் 23 ஆயிரத்து 173 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.