ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் மலட்டாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஏரிப்பாளையம் – செம்மேடு சாலையை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது.
இதனை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா இராசேந்திரன் பார்வையிட்டு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகளுடன் நேரில் வந்து பார்வையிட்டனர்.
உடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர்கள், பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவர் சபா பாலமுருகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே அறிவழகன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் கே ஆர் சந்தோஷ்குமார், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.