திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தர்மபுரியில் இருந்து பழனிக்கு சாமி தரிசனம் செய்ய டாக்டர் தம்பதியினர் பழனிசாமி – கிருத்திகா காரில் சென்று கொண்டிருந்தனர்.
காரை பாவேந்தர் என்பவர் ஓட்டி வந்தார். கார் வேடசந்தூர் அருகே வந்தபோது கூகுள் மேப் காட்டிய மண்பாதையில் சென்ற கார் சேற்றுக்குள் சிக்கிக் கொண்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் தீயணைப்புத்துறையினர் காரை மீட்டனர்